பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

முடியரசன்


றான். புலவர் அதனைக் கொள்ளாது சென்றுவிடுகின்றார். சிறிது கொடுப்பின் கொள்ளாப் பெருந்தன்மையையும், தன் பெருமிதத்தையும், பெரிது கொடுப்போர் உலகத்தில் உண்மையையும் வெளிமானுக்கு உணர்த்த வேண்டுமென்னும் நோக்குடன் யானைப் பரிசில் வேண்டுகிறார் புலவர். குமணனும் தந்துவிடுகிறான். அதனைப் பெற்று வந்து, வெளிமானுடைய காவல் மரத்திலே கட்டிவிட்டுக்

“கடிமரம் வருந்தத்தந்தியாம் பிணித்த
நெடுநல்யானை எம்பரிசில்”
(புறம்-162)

எனக் கூறிச் சென்றுவிடுகிறார். காவல் மரம் என்பது பகையரசர் அணுகாத வண்ணம் காக்கப்படும் மரம். அக் காவல் மரத்தில் ‘எமது பரிசிலாக இவ் யானையை வைத்துக் கொள்’ என்று கட்டிவிட்டுச் சென்ற புலவரா இகழ்ச்சிக்குரியவர்?

குமணன், யானையொடு வேறு பரிசிலும் தந்து விடுத்தான். அப் பரிசிற் பொருளைப் பெற்று வந்த பெருஞ்சித்திரனார் யாது செய்தனர்? தம் வறுமை நீங்கிற்று; இனி மகிழ்ந்திருப்போம் என்றா எண்ணினார்? அன்று, அன்று. தம் மனைவியை அழைத்தார். “மனைகிழவோயே! குமணன் தந்த இச் செல்வத்தை, உன்னை விரும்பும் மகளிர்க்கும், உன்னால் விரும்பப்பட்ட மகளிர்க்கும், உன் சுற்றத்து மூத்த மகளிர்க்கும், நமது பசி நீங்க நெடுநாள் நமக்கு உதவியோர்க்கும் கொடு; இன்ன தன்மையர் என்று கருதாது கொடு; என்னொடும் சூழாது கொடு; நாம் நன்கு வாழ்வோம் என்று காத்து வையாது கொடு; நீயும் கொடு; நானும் கொடுப்பேன்” என்று வள்ளலாகிவிடுகிறார் புலவர். இத்தகு பேருளங் கொண்டோரை இகழ்ந்து பேச எவ்வாறு துணிகின்றதோ அந்த முற்போக்காளர் நெஞ்சம்!

பெருஞ்சித்திரனார் ஒருமுறை அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசில் கருதிச் சென்றார். அவன் அவரையழைத்து உரையாடி அவர்தம் கல்விப் பெருமையறிந்து பரிசில் நல்காது, பரிசில் மட்டும் மற்றவர் வாயிலாகத் தந்து விடுத்தனன். புலவர் அதனை ஏற்றுக் கொள்ளாது,

“காணாது சத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப்பரிசிலன் அல்லேன்” (புறம். 208)

எனத் துணிந்து மறுத்து விடுகிறார். இப் புலவர் பெருந்தகைக்குப் பரிசில் முதன்மையன்று; தன்மதிப்பே முதன்மையாகும்.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனிடம் பரிசில் வேண்டிச் செல்கிறார். வளவன் விரைந்து பரிசில் தாராது காலம் நீட்டித்தான். அப்பொழுது சினந்து அவனிடம் அவர் கூறுகிறார், “மன்னா, நாற்படையுடைய வேந்தராயினும் அவர் எம்மை மதியாவிடின், அவரை மதித்து வியந்து யாமும் பாடமாட்டோம். சிறிய