179 'பல காரணங்களால் தற்போது நீங்கள் மனஅமைதி இழந்து தவிப்பதாக நான் அறிகிறேன். இது உண்மையானால், உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். வங்காளத்தில் ஒரு சமயம் மன அமைதி இழந்து தவித்த நடிகர் திரு கிரீஸ்சந்திர கோஷை மகா புருஷராக்க அங்கே ராமகிருஷ்ண பரமஹம்சர் இருந்தார். அவரைப்போலவே உங்களையும் மகாபுருஷராக்க இங்கே சுவாமி சித்பவானந்தர் இருக்கிறார். வாருங்கள்; வந்து அவருடைய அருளைப் பெற்று அமைதியுறுங்கள்.' அப்போதிருந்த நிலையில் பாகவதர் அந்தக் கடிதத்தை அலட்சியம் செய்யவில்லை; உடனே திருப்பராய்த் துறைக்குப் போனார். சுவாமி சித்பவா னந்தரை மனம், மொழி, மெய்களால் வணங்கினார். சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, அவருடைய அருளைப் பெறவும் விரும்பினார். ஆனால் மக்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை; அவர் தபோவனத்திற்கு வந்திருக்கும் செய்தியை எப்படியோ அறிந்து கொண்டுவிட்ட அவர்கள், அங்கே திமுதி.மு வென்று திரள ஆரம்பித்துவிட்டார்கள். இந்த 'அன்புத்தொல்லை"யைப் பார்த்தார் நண்பர்; 'இனி இந்த இடத்தில் பாகவதர் அமைதி பெறமுடியாது” என்ற தீர்மானத்துக்கு வந்தார். சுவாமி சித்பவானந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு, நேராகச் சோளிங்கபுரத்துக்கு வந்தார். அங்குள்ள சஞ்சீவித் தீர்த்தத்தில் அவரை நீராட வைத்தார். அப்படியே திருப்பதிக்குச் சென்று இருவரும் வேங்கடாசலபதியைத் தரிசித்தார்கள். அதற்குள்'எங்கே பாகவதரைக் காணோம்?', 'பாகவதர் எங்கே போய்விட்டார்?' என்று சென்னையி லிருந்த படாதிபதிகள் அவரைத் தேடு,தேடு' என்று தேட ஆரம்பித்துவிட்டார்கள்.
பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/182
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை