C 16 ஆரியத்தால் பொறுக்க முடியவில்லை. எதையும் வஞ்சத் தால் எதிர்க்க ஆரியர் துணிவு கொண்டனர். அக்காலத்தில் அரசர்கள் கூட பார்ப்பனர்களுக்குப் பயந்துகொண்டு அவர் களுக்குமட்டும் பொருள் வழங்கிவந்தார்கள். ஆனால் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஹர்ஷர் பார்ப்பனன், பார்ப் பனனல்லாதான் என்ற வேறுபாடு கருதாது எல்லோருக் கும் பொருள் கொடுத்து வந்தார். இதன் காரணமாகப் பார்ப்பனர் ஒன்று கூடி ஹர்ஷரைக் கொல்ல சூழ்ச்சி செய் தனர். ஆனால் இதபற்றிய செய்தி ஹர்ஷருக்குத் தெரிய வரவே ஐந்நூறு பார்ப்பனர்கள் நாடு கடத்தப்பட்டனர். The Menace of Hindu Imperialism என்ற நூலில் கூறியபடி ஹர்ஷர் கடைசி நாட்களில் ஆசிய வஞ்சகர்களால் கொல்லப்பட்டார். ஆண் சிவாஜியைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அஞ்சா நெஞ்சம் படைத்த வீரன்.சுல்தான்களுக்கு எதிராகப் போரிட்டு கல்யாண், புரந்தர் முதலிய கோட்டை களை முற்றுகையிட்டு அவற்றைப் பிடித்த தீரன். எதிர்த்த மாவீரர்களின் தலைகளை மலைமலையாகக்குவித்தான். போர்க் களங்களை இரத்தக்களமாக ஆக்கினான். பகைவரை நடுங்கும் படிச் செய்தான். வெற்றிகொண்ட மராட்டிய வீரன் நாட்டு க்கு அரசனாக ஆசைப்பட்டான் ஆனால்வேதியர்கூட்டம், சிவாஜி சூத்திரன் ஆனதால் அரசனாவதற்கு அருகதையற்ற வன் என்றதி¥ சிந்தித்தான சிவாஜி கர்ஜித்தான் மையைச்செலவழித்தேன்! வீரச்செயல்கள் புரிந்தேன் ! பகைவரை நடுங்கும்படிச்செய்தேன்! நான் ஆளுவதற்கு உரிமையில்லையா? என்னை யார் தடை செய்ய முடியும்? எனப்பலவாறாக எண்ணினான். ஆனால் பார்ப்பனர்களின் எகிர்ப்பு எத்தன்மையது என்றறிந்து அஞ்சினான். வீரத்தை நிலைநாட்டிய வீரன் கடைசியில் கலங்கி கங்குப்பட்டர் காலடியில் வீழ்ந்தான்! வீழ்ந்தபிறகு வேதியர் கூட்டம் (சிவாஜியை க்ஷத்திரியன் ஆக்கியது. தன் நிறை அளவு பொன் னையும் மணியையும் அதற்குமேற்பட்ட பொருள்களையும் பார்ப்பனர்களுக்கு யாகம் செய்ய வாரி வாரி இறைத்தான்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
