பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


இலட்சியவாதிகளான சிலர், உயர்ந்த கொள்கைகளைப் பரப்புவதற்காக சொந்தத்தில் பத்திரிகை நடத்திக்கொண்டிருந் தசர்கள். தனிநபர் முயற்சிகளாக, திரு.வி. கலியாணசுந்தரனர் நடத்திய நவசக்தி'யும், கே. எஸ். வேங்கடரமணி நடத்திய "பாரதமணி"யும் இப்படிப்பட்டவை.

வேங்கடரமணி கிராமப் புனறாத்தாரண த்தில் (கிராமங்களுக்குப் புத்துயிர் அளிப்பது) தீவிர ஆர்வம் உடையவர். முருகன் ஒர் உழவன் 'தேசபக்தன் கந்தன்' என்ற அவருடைய நாவல்கள் பிரபலமானவை. அவர் எழுதிய இங்கிலீஷ் நூல்கள் பல 1930 களுக்கு முன்பு இங்கிலாந்து பிரசுரக் கம்பெனியால் வெளியிடப்பட்டவையாகும். அவர் தமிழில் நடத்திய பாரதமணி ' உயர்ந்த நோக்கங்கள் கொண்ட தரமான பத்திரிகையாக இருந்தது,

பெண்கள் பத்திரிகை என்றும் அந்நாட்களில் சில தனிப் பத்திரிகைகள் வரத்தான் செய்தன. லோத்ரா ’ கம்பெனியார் நடத்திய கிருகலட்சுமி குறிப்பிடத்தகுந்தது.

திருமதி வை, மு. கோதைநாயகி அ ம் ம ன ஸ் ஜகன்மோகினி என்ற மாதப் பத்திரிகையை வெகுகாலம் தொடர்ந்து நடத்தினார். அவர் எழுதும் நாவல்கள் (தேச சேவை சமூக சீர்திருத்தம் முதலிய விஷயங்களைக் கொண்டவை ) அதில் பகுதி பகுதியாகத் தொடர் பிரசுரம் பெற்றன.

'தினமணி' நாளிதழ் கூட இலக்கியத்துக்கு அரிய சேவை செய்துள்ளது. 1930 களில் வருடம் தோறும் தினமணி ஆண்டு மலர் வெளியிட்டது. புதுமைப் பித்தன் மேற்பார்வையில் உருவான அம்மலர்கள் இலக்கிய ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக விளங்கின. ஒவ்வொரு