பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


ஆண்டுமலரும், அரும்மையான கதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் கொண்ட இலக்கியக் களஞ்சியமாகவே அமைந்திருந்தது. ‘மணிக்கொடி' கதைப்பத்திரிகை நின்று போனது இலக்கியவாதிகளுக்கு ஒரு நஷ்டமாகவே இருந்தது. அதைப் போல் புதிய சோதனைகளுக்கும் தரமான கதைகளுக்கும் இடம் தரக்கூடிய ஒரு பத்திரிகையின் தேவை பலராலும் உணரப்பட்டது.

அந்தக் குறையை நீக்குவதற்காக அவ்வப்போது சில முயற்சிகள் தோன்றின. சிறிது காலம் தம் பங்கைச் செலுத்தி விட்டு மறைந்தும் போயின. சூருவளி, கலாமோகினி, கிராம ஊழியன், தேனி போன்றவை அவை.

'டைஜஸ்ட்' பாணியில் ஒரு தரமான பத்திரிகையாக சக்தி வந்தது. பல்வேறு விஷயங்கள் பற்றிய கட்டுரைகள் நிறைய இருக்கும். கதைகளும் உண்டு. மொழி பெயர்ப்பு விஷயங்களே மிகுதி. துணுக்குகள் அதிகம். வை. கோவிந்தன் நடத்திய இப்பத்திரிகையில் தி.ஜ. ர(தி.ஜ. ரங்கநாதன்) நீண்ட காலம் ஆசிரியராக இருந்தார். அவர் 'மஞ்சரி’ ஆசிரியராகப் போய் விட்டதும், சுப. நாராயணன் என்ற திறமை படைத்த எழுத்தாளர் அதன் ஆசிரியரானுர், அவருக்குப் பிறகு தொ. மு.சி. ரகுநாதனும் கு. அழகிரிசாமியும் 'சக்தி', ஆசிரியர்களாகப் பணியாற்றினர். இறுதிக் கட்டத்தில் ( சரஸ்வதி விஜயபாஸ்கரன் அதன் - ஆசிரியரானர். சக்தி மாதிரி ஒரு பத்திரிகை தமிழுக்குத் தேவைதான்.

தற்காலத்திய சிறுபத்திரிகைகள் மாதிரி என்று சொல்ல முடியாவிட்டாலும், குடிசைத் தொழில் போன்ற சிறு முயற்சிகளாகச் சிறு சிறு இதழ்கள் அங்கங்கே தோன்றி, சிறிது