பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

காலம் தம்மாலியன்ற அளவுக்குப் பணிபுரிந்து விட்டு, உயிர் விடுவது அக்காலத்திலும் சகஜமாகத் தானிருந்தது. இளம் எழுத்தாளர்கள் வளர்ச்சி பெறுவதற்கு உதவக்கூடிய பயிற்சித் தளங்களாக இவை உதவின என்று சொல்ல வேண்டும்.


3

 

1947ல் இந்திய சுதந்திரம் அடைந்தது.

தேசீய விடுதலைக்காகப் போராடிய கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்கள். சுதந்திரம் கிடைத்து விட்டது என்ற திருப்தி பலப்பலருக்கும் ஏற்பட்டது. தாங்கள் எதுக்காகப் போராடினர்களோ அந்த லட்சியம் சித்தித்துவிட்டது என்ற ஒரு நிறைவு நாடுநெடுகிலும் பரவியதாக தோன்றியது.

1948ல் காந்திஜீ சுட்டுக் கொல்லப்பட்டார்.

காலவேகத்தில், மாறுதல்களும் முன்னேற்றங்களும் மெதுமெதுவாகத் தலைகாட்டின. பதவி மோகமும், பணம் பண்ணும் பலரையும் பிடித்துக் கொண்டன. சந்தர்ப்பவாதிகளும், பணம் படைத்தவர்களும், முன்பு போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி யிருந்தவர்களும், சுயலாபநோக்கு உடையவர்களும், ஆளும் கட்சியைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவதில் ஈடுபட்டனர்.