பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


சராசரி வாசகர்களை சாதாரண மக்களை - கவர்ந்திழுக்கக் கே.டி உத்திகளை எல்லாம் கையாள முன் வந்தார்கள். மேலைநாட்டுப் பத்திரிகை அதிபர்கள் கடைப்பிடித்து வெற்றி கண்ட வியாபார மற்றும் விளம்பர நுணுக்கங்கள் பலவற்றையும் வெற்றிகரமாகக் கையாண்டார்கள்; தங்கள் பத்திரிகைகனை வளர்த்தார்கள்.

ஆளும் கட்சியினரின் போக்கில் அதிருப்தி கொன்ட இதர அரசியல் கட்சிகளும், மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காகப் பத்திரிகைகளைப் பயன் படுத்த முனைத்தன.

எனவே, சுதந்திரத்திற்குப் பிறகு, புதிய புதிய பத்திரிகைகள் அதிகம் தோன்றிக் கொண்டேயிருந்தன.நாட்டில் சினிமாவின் செல்வாக்கு தீவிரமாகவும் வேகமாகவும் வளர்ந்து கொண்டிருந்ததால், சினிமா சஞ்சிகைகளும் எண்ணிக்கையில் அதிகமாயின.

எல்லாமே, வியாபார நோக்கில், மிக அதிகமான இக்களே எட்ட வேண்டும் என்ற ஆசையோடும் ஆர்வத்தோடுமே தயாரிக்கப்பட்டன. அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற்றன என்று சொல்வதற்கில்லை.

பத்திரிகையையும் லாபகரமான தொழிலாக நடத்தி வெற்றி பெறமுடியும் என்று சாதித்துக் காட்டிய பெருமை, 'தினத்தந்தி' 'குமுதம்' ஆகியவற்றின் அதிபர்களைச் சேரும்.

'தினத்தந்தி' நாளிதழ். பத்திரிகை என்பது சாதாரண ஜனங்களும் விரும்பிப் படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்; சிக்ஷாக்காரன் கூடப் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில்