பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


இலக்கணம். மர்மம், துப்பறிதல், சாகசச் செயல்கள் முதலியன நிறைந்த கதைகளுக்கு வரவேற்பு அதிகம். சரித்திர நாவல்’ என்ற பெயரில், இந்தக் கலவைகளை அதிகம் சேர்த்து, புதுவித மர்ம நாவல்களும் எழுதப்படுகின்றன. பத்திரிகைகளின் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அநேக எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.

பத்திரிகையும் லாபம் தரக்கூடிய ஒரு வியாபாரம் தான் என்ற எண்ணமும், அதன் அடிப்படையில் செயல்புரிகிற போக்கும் 1950களில் வளரத் தொடங்கி, 1960களில் வலு அடைந்தது. 1970 களில் இது மும்முரமாயிற்று. பெரும் லதனத்தை ஈடுபடுத்தி, இவ் வியாபாரத்தில் பலர் ரவேசிக்கவும், பலப்பல வாரப்பத்திரிகைகள் தோன்றி வரலாவின . அவைகளுக்கிடையே போட்டி எற்பட்டு, ஒரு பத்திரிகை குறிப்பிட்டது போல, காகித ரேஸ் தீவிரம் அடைந்தது.

அனைத்துக்கும் 'குமுதம் ' பத்திரிகையே முன்னோடியும் அமைந்தது.

'குமுதம்' லட்சம் லட்சமாக உயர்ந்து, வாரம் தோறும் ஐந்தரை லட்சம் பிரதிகள் செலவாகும் வெற்றி கரமான பத்திரிகை என்ற அந்தஸ்தை எட்டியது. பத்திரிகைப் பிரதியை பத்து வாசகர்கள் படிக்கிறார்கள், ஆகவே ஐந்தரை லட்சம் X பத்து என்ற அளவில் வாசகர் எண்ணிக்கை பெருகி உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வளவு பரந்த அளவில் வாசகர்களின் எண்ணிக்கை வளர்த்திருப்பதற்காக சந்தோஷப்படலாம். சரி வாசகர்களின்