பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



றிவு விழிப்பு, சிந்தனைத் தெளிவு, நல்ல இலக்கியம் கலை முதலியவற்றில் ஈடுபாடு, புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் அவா, திறமைகளை அறிந்து வளர்த்தல், புதிய சோதனைகளுக்கு ஊக்கம் அளித்தல், இளைய எழுத்தாளர்கள் வளர்ச்சி பெறுவதற்குத் தளம் அமைத்தல், சமூக உணர்வை வளர்த்தல் - இவ்வாறு பல வழிகளிலும் 'சிறு பத்திரிகை'கள் சாதனைகள் புரிய இயலும்.

கவி. சுப்பிரமணிய பாரதியார், வ. வெ. சு. ஐயர் முதலியவர்கள் நடத்திய சிற்றிதழ்களும், 1930களில் தோன்றி வளர்ந்த பல பத்திரிகைகளும், அவற்றின் வழி நடந்த 1940 காலச் சிறு ஏடுகளும் இம் முறைகளில் தங்களால் இயன்ற அளவு செயலாற்றியுள்ளன. இது வரலாறு.

அவை எல்லாம் தன்மையினால்' சிறுபத்திரிகை' என்று கருதப்பட வேண்டியவை. நடைமுறையில், அவையும் வியாபார ரீதியிலும் வெற்றிகரமாக வளர முடியுமா என்ற பரிசோதனையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. ஆயினும் அவற்றில் எதுவும் வியாபார வெற்றி பெற முடிந்ததில்லை.

உண்மையிலேயே 'சிறு பத்திரிகை, என்ற ரகத்தைச் சேர்கிற பத்திரிகை முயற்சி தமிழ் நாட்டில் 1960களில் தான் ஆரம்பமாயிற்று.

விற்பனை பற்றி யோசிக்காது - ஏஜன்சி அல்லது பிறர் சகாயம் மூலம் அதிகபட்ச வாசகர்களை எட்ட