பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


ஆசைப்படாது-குறைந்த அளவு பிரதிகள் மட்டுமே அச்சிட்டு, கனமான, தரமான சிந்தனபூர்வமான, அறிவுக்கு உணவாகக் கூடிய விஷயங்களை மட்டுமே கொடுப்பது; 500 வாசகர் காதுக்குள் இருந்தாலே போதும் என்று வரையறுக்கப்பட்ட தாக்கத்துடன், எழுத்தாளர் சி. சு. செல்லப்பா 'எழுத்து' பத்திரிகையை ஆரம்பித்தார். இலக்கிய விமர்சனத்துக்காக என்று மட்டுமே துவக்கப்பட்ட, இந்த மாத இதழ் புதுக்கவிதை, இயக்க ரீதியில் வளர்வதற்குத் துணை புரிந்து வரலாற்றுப் பெருமை தேடிக் கொண்டது.

அதன் பிறகு, தனித்தனி நோக்குடன், பல சிறு பத்திரிகைகள் தோன்றின. இலக்கிய வட்டம், நடை காடதபற. பிரக்ஞை இப்படி பலப்பல.

புதுக்கவிதை வளர்ச்சி பெறவும், 'சமுதாயப் பார்வையோடு' கவிதைகள் படைக்கப்பட வேண்டும் என்ற எழுச்சியோடு, 'வானம்பாடி' என்ற 'விலையிலாக் கவிதை ஏடு' தோன்றியது. இது காட்டிய வழியில் 'தனிச்சுற்றுக்கு மட்டும்' என்று அறிவித்து, சில நூறு பிரதிகளே அச்சாகக்கூடிய, சிறு பத்திரிகைகள் தமிழ்நாடு நெடுகிலும் பரவலாக எழுந்தன. சில ஆரம்ப வேகத்திலேயே வீழ்ந்து மறைந்தன. அநேகம் சில காலம் வரை வளர்ந்து, பின் தேய்ந்து மாய்ந்தன.

1971 களில், பல்வேறு நோக்கங்களோடு, சிறு பத்திரிகைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றின . அவற்றில் ஒரு சில தான் நீண்டகாலம் , வாழ் முடிந்திருக்கிறது. பல மூன்று இதழ்கள், இரண்டு இதழ்கள் வெளிவந்து நின்று விட்டன; ஒரே இதழுடன் நின்று போனவை பலவாகும்.

வெறும் உற்சாகத்துடன் பத்திரிகைத்துறையில் ஈடுபட்ட இளைஞர்களிடம் உள்ள குறைபாடுகளே இவற்றுக்கு