பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

காரணம். பணபலம் இல்லாததால் பெரும்பான்மை முயற்சிகள் ஆரம்பத்திலேயே தோல்வி கண்டன.

சிறிது காலம் வளர முயன்றவை எல்லாமே சாதனைகள் புரிந்தன. என்றும் சொல்வதற்கில்லை. பத்திரிகை ஆரம்பிக்கிற இளைஞர்கள் பலப்பல காரணங்களினால் அம் முயற்சியில் இறங்குகிறார்கள்.

தங்கள் எழுத்துக்சள் பெரிய பத்திரிகைகளில் இடம் பெறாமல் போவதால், நம் கதை கவிதை-கட்டுரைகளை நாமே வெளியிட சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பிப்போம் என்ற வேகம் அநேக முயற்சிகளின் மூலகாரணமாக அமைகிறது. ‘கையழுத்துப் பத்திரிகை’ நடத்துகிற இளைஞர்கள் அதை அச்சில் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு, சிறு பத்திரிகை தொடங்குவதும் சகஜமாக இருக்கிறது. ‘யார் யாரோ பத்திரிகை நடத்துகிறார்கள்; நாமும் பத்திரிகை நடத்துவோமே!’ என்ற உந்துதல்; நாம் பத்திரிகை ஆசிரியர் என்று மதிக்கப்பட வேண்டும் என்ற ஆசை - இவ்வாறு பல காரணங்கள்.

இதனால், படித்துக் கொண்டிருக்கிற மாணவர்களும், படிப்பை முடித்து விட்டு சும்மா இருக்கிற இளைஞர்களும் பத்திரிகை ஆசிரியர்களாகி, தனித் தனிப் பத்திரிக்கைகள் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இவர்களில் பெரும் பலருக்கு வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை மற்றும் மனிதர்கள் பற்றிய தனித்த நோக்கு, சிந்தனைத் திறம், விசாலப் பார்வை, - ஆழமான படிப்பு, போதுமான கற்பனை முதலியவை இல்லை. அதனால், அவர்களது எழுத்தில் புதுமையும் ஆழமும் கனமும் இருப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் வணிகநோக்குப் பத்திரிகைகளை காப்பி அடித்தே தங்கள் பத்திரிகைகளைத் தயாரிக்கிறார்கள். எனவே, அவை