பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


இந்நிலைக்கு பத்திரிகைகள், எழுத்தாளர்கள், நாட்டின் மக்கள் ஆகிய மூன்று சாராருமே காரணமாவர்.

எழுத்தாளர்கள், ‘பணத்துக்காகத் தான் எழுதுகிறோம்’ , ‘புகழ் பெறுவது சந்தோஷமாக இருக்கிறது; மனநிறைவு தருகிறது’ என்ற நோக்குடன் எழுதுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அடியோடு விட்டு விடுவது என்பது சாத்தியமற்றது. பணம் தேடுவதும், புகழை நாடுவதும் மனித இயல்புகள் தான். எனினும், பணத்துக்காகவும், புகழுக்காகவும், தங்களை அடிமையாக்கிக் கொண்டு, சமுதாய உணர்வைப் புறக்கணித்து விட்டு, கலாச்சாரச் சீரழிவைப் பரப்புகிற எழுத்துக்களைப் படைப்பதைத் தவிர்க்க வேண்டும். கலை நயமும் தரமும் நிறைந்த எழுத்துக்களை, எளிய இனிய அழகிய முறையில் மக்களுக்குப் பிடிக்கக் கூடிய விதத்தில் எழுத வேண்டும்.

அவை போன்ற படைப்புக்களை, வியாபார வெற்றி கண்டுள்ள பெரிய பத்திரிகைகள், தர முன்வரவேண்டும். வழக்கமான மசாலாத் தனங்களோடு, தரமான உயர்ந்த விஷயங்களையும் ஒரு அளவில் கலந்து கொடுத்து வந்தால், வாசகர்களுக்கு அவற்றின் மீதும் சுவை ஏற்படுத்த முடியும்.

மக்களின் கல்வி அறிவு பெருக வேண்டும். எண்ணிக்கையில் பெருகி உள்ள வாசகர்க்ளிடையே தரம் உணர்ந்து படிக்கக் கூடியவர்கள் தொகை பெருக வேண்டும்.

இதற்குப் பத்திரிகையாளர்கள் தான் பெரிதும் உதவ முடியும்.

பத்திரிகைகள், பொதுவாக, மக்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூறுவதற்காக ஏற்பட்டவை. வம்பளப்பு