பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


இவை எல்லாம் கவர்ச்சி அம்சங்களாகத் தோன்றுகின்றன.

என்றாலும், தமிழ் நாட்டில் எழுத்தாளர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகத் தான் இருக்கிறது.

இவை எல்லாம் பத்திரிகைகளின் ஆதரவையும், பத்திரிகை அதிபர்களின் நல்லெண்ணத்தையும் பெற்று விடுகிற குறித்த ஒரு சில எழுத்தாளர்களுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்பு தான் இருக்கிறது.

திறமையுள்ள, இலக்கியத் தரமான கதைகள் எழுதுகிற, எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இப்பத்திரிகைகளிலும் மாத வெளியீடுகளிலும், இடம் பெறுவதேயில்லை. அதாவது, புதுமையான எழுத்துக்கள், தரமான ஆழ்ந்த இலக்கியப் படைப்புகள், சோதனை ரீதியான சிருஷ்டிகள், நடை (ஸ்டைல்) – குணசித்திரம் – உணர்ச்சி – உளஇயல் போன்ற அம்சங்களில் அக்கறை காட்டுகிற சொற் சித்திரங்கள் தற்காலப் பத்திரிகைகளுக்குத் தேவை இல்லை. இந்த ரகமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் பிரசுர வாய்ப்பைப் பெறுவதே இல்லை.

ஆகவே, இந்த ரகமான எழுத்தாளர்கள் எழுத்து மூலம் எவ்வித வருமானமும் பெற முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் எதாவது ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டு உழைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சிலர் பத்திரிகை அலுவலகங்களில் பணிபுரிவதில் ஆர்வம் கொள்கிறார்கள். எழுதுவதை ஓய்வு நேரத்தில் கவனிக்கலாம் எனக் கருதுகிறார்கள்.