பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


திறமையாளராக இருந்த போதிலும்; அவர்களுடைய கதை, கவிதை, கட்டுரைகள் பெருமளவு கவனிப்பதையும் பாராட்டுதலையும் பெற்றிருந்தாலும் கூட-அவர்கள் வேலை பார்க்கிற பத்திரிகையில் இடம் பெறுவதில்லை. ஆசிரியப் பொறுப்பில் இருப்பவர்கள், அவர்களது எழுத்துக்கள் அவ்விதம் வெளிவந்து கவனிப்பைப் பெறவிடாதபடி கவனித்துக் கொள்கிறார்கள்.

அவர்கள், ஒரு பத்திரிகையில் பணி புரிகிற போது, இதர பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பவும் கூடாது. இதனால், ஆற்றல் நிறைந்த எழுத்தாளர், ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்குச் சேர்வதனால், ஒரு திட்டமான மாத வருவாய்க்காக, தன்னைத் தானே இருட்டடிப்புக்கு உள்ளாக்கிக் கொள்கிறார் என்று தான் ஆகிறது.

இச் சூழ்நிலையில் 'எழுத்தாளருக்கு சுதந்திரம் இருக்கிறது நம் நாட்டிலே!' என்று பெரும் பேச்சு பேசப் படுவதிலும் குறைச்சல் இல்லை.

நிலைமைகள் இவ்வாறெல்லாம் இருப்பினும், எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற ஆசை இளைஞர்களைப் படித்து ஆட்டுவித்துக் கொண்டே தான் இருக்கிறது. எழுத்தாகானாகவே வாழ வேண்டும் என்ற ஒரு வேகம் சில பேரைப் பற்றிக் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கையே வீணாகிப் போகும் படியான காரியங்களை செய்யத் தூண்டுகிறது.

சிலர் எழுத்துத் துறையில் பெற்று விடுகிற பகட்டான வெற்றிகளைக் கண்டு, நாமும் இப்படி எல்லாம் வளர்ந்து பெயரும் புகழும் பணமும் பெற்று, பிரபலங்களாக உலாவர முடியும் என்று அநேக இளைஞர்கள் ஆசைக் கனவுகள் காண்கிறார்கள். சில கவிதைகளை அல்லது கதைகளை