பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

எழுதி விடுவதனால் தங்களுக்கு எழுத்துலகில் வெற்றிப் பாதை சுலபமாகக் கிட்டிவிடும் என்று நம்புகிறவர்கள் எத்தனை பேர்!

இந்த நம்பிக்கையால், ஆசையால், தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிற நிரந்தரமான வேலையை உதறி எறிந்து விட்டு, சென்னைக்கு வந்து பத்திரிகை அலுவலகங்களின் வாசல்படிகளை ஏறி இறங்கித் தவம் புரிந்து கொண்டிருப்பவர்களும் காணப்படுகிறார்கள்.

பிரபலப் பத்திரிகைகளில் தொடர் கதைகள் எழுதி வாசகர்களின் பாராட்டுதல்களை அமோகமாகப் பெற்ற எழுத்தாளர் – அவை புத்தகங்களாக வெளி வந்து நல்ல நாவலாசிரியர் எனும் சிறப்பைப் பெற்றவர் – பத்திரிகை ஆசிரியர் – இலக்கியக் கூட்டங்களில் சபாரஞ்சகமாகப் பேசி ரசிகர்களின் கைதட்டல்களை ஏகமாகப் பெறுகிறவர் – பல வருடங்களாக எழுத்தாளராக வாழ்ந்து சிரமங்களை எதிர் கொள்ளும் அன்பர்: அவர் ஒரு சமயம் குறிப்பிட்டார், ஒரு நண்பரை சுட்டிக் காட்டியபடி – ‘அதோ இருக்கிறாரே அவர் நல்ல நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பத்திரிகைகளுக்கு எழுதினார். நம்மைப் போன்றவர்கள் தந்த ஆதரவு அவருக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளித்திருக்கிறது. தேர்ந்த எழுத்தாளன் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டு விட்டது. நமக்கு இன்னும் ( தன்னையும், அவர் ஒத்த இரண்டு பிரபல எழுத்தாளர்களையும் குறிப்பிட்டு) அவர்களுக்கும் கிடைத்து வருகிற பாராட்டுக்கள், மரியாதைகள், புகழ் வெளிச்சங்களை எல்லாம் பார்த்து, இவரும் தனக்கும் இவை எல்லாம் கிடைக்கும், முழு நேர எழுத்தாளன் ஆகி விட்டால் என்று எண்ணி, வேலையை விட்டு விட்டு வந்து நிற்கிறார். நாம் உதவி பண்ண வேண்டும் என்று