பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


இது தவறான நோக்கு. தன்னுடைய எழுத்துக்களை மற்ற எல்லோரும் படிக்க வேண்டும் - படித்துப் பாராட்டி வுேண்டும் - என்று எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள். அதே எண்ணத்தை மற்றவர்கள் விஷயத்தில் இவர்களும் செயல்படுத்தினால் என்ன கெட்டு விடும்?

பிறருடைய எழுத்துக்களையும், பரவலாக நிறையப் புத்தகங்கனையும் படிப்பதனால் தங்களுடைய சுய சிந்தனை பாதிக்கப்படும்; பிறரது எழுத்துக்கள் தங்கள் உள்ளத்தில் பதிவுகளையும் பாதிப்புகளையும் உண்டாக்குவதன் மூலம் தங்களுடைய எழுத்தும் இயல்பாகவே பாதிக்கப்படும் என்று சிலர் அஞ்சுகிறார்கள். வெளிப்படையாகவும் சொல்கிறார்கள்.

இதுவும் தவறான கருத்தே ஆகும். சோம்பேறி இயல்பும், தன்னம்பிக்கைக் குறைவும் பெற்றிருப்பவர்கள் தான் இப்படிச் சொல்வார்கள். படிப்பு சிந்தனைத் திறனை கூர்மைப்படுத்தும் அனுபவ அறிவு அதிகரிக்கத் துணைபுரியும். சுயமான திறமையும் தெளிவான சிந்தனை ஆற்றலும் உடையவர்கள் பிறரது கருத்துக்களால், நூல்களால் பாதிக்கப் பெற்று சலனம் அடைவோம். என்று பயப்படவே மாட்டார்கள். பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது.

பெரிய பெரிய அறிவாளிகள், சிந்தனையாளர்கள், சாதனைகள் மிகப் புரிந்தவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும், ஒரு மாணவனின் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும். படித்துக் கொண்டே இருந்தார்கள். இது வரலாற்று உண்மை.