பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உலக இலக்கிய மேதையாக விளங்கிய பெர்னட்ஷா, படைப்பு இலக்கியத்தில் இது வரை வேறு எவரும் தொட இயலாத அளவில் பல சிகர சிருஷ்டிகளை உருவாக்கியுள்ள லியோ டால்ஸ்டாய் மற்றும், அரசியல் தலைவர்களான லெனின், நேருஜி போன்றவர்கள் படிப்பதில் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களுடைய வரலாறுகள் கூறும்.

படிப்பதில் காட்டுகிற அக்கறையையும், உற்சாகத்தையும் உழைப்பையும், எழுதுவதிலும் காட்ட வேண்டும். தினசரி ஏதாவது எழுத வேண்டும்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல், எழுத்துத் தேர்ச்சியும் எழுதி எழுதி பழகிப் பெறக் கூடிய ஒன்று ஆகும். பெயர் பெற்றுள்ள எழுத்தாளர்கள் சிலர், ஒவ்வொரு நாளும் இத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, அதை விடாது கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார்கள்.

தேர்ச்சியும், அனுபவ முதிர்க்சியும், பெயரும் பெற்று விட்ட பிறகும் கூட — முதுமைப் பருவத்திலும் இப்பழக்கத்தை விடாது, தினசரி இத்தனை பக்கங்கள் எழுதியே தீர்வது என்று கொள்கைப் பிடிப்புடன் எழுதி வருகிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.

எதுவும் உழைப்பு இல்லாமல் எளிதில், சுலப வெற்றியாக, சித்தித்து விடாது.

எழுத்துத் துறையில் முன்னேறி சாதனைகள் புரிய ஆசைப்படுகிறவர்கள் யாரையும் பின்பற்றாமல் தனிக்கெனத் தனி வழி மேற்கொள்ள் வேண்டும். பெயரும் புகழும்