பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

 வெளிப்படுத்துகிறார்கள். தங்களுக்கு இலகுவில் கைவரக் கூடிய எழுத்து வடிவம் மூலம்-சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், நாவல் என்ற எந்த விதத்திலாவது - தங்கள் உணர்வுகளை, அனுபவ பாதிப்புகளை வெளியிடுகிருர்கள்.

இவை சாதாரண ரீதியில் செய்யப்படுகிறபோது வெறும் எழுத்து ஆக இருக்கின்றன. பத்திரிகைகளில் பெரும்பாலும் தென்படுகிறபொழுது பேசக்குக் கதைகளாகவும் சாரமற்ற எழுத்துக்களாகவும் அமைகின்றன.

பேச்சிலே கூட, ஒரே அனுபவத்தை, அல்லது ஒரே விஷயத்தை, ஒவ்வொருவர் எடுத்துச் சொல்வது வெவ்வேறு விதமாக அமையும். அவரவர் பார்வை, சொல்கிற தினுசு, கொடுக்கிற அழுத்தம் கொள்கிற அர்த்தம், கூட்டியும் குறைத்தும் - விட்டும் சேர்த்தும் கலக்கிற வேலைத்தனங்கள் இப்படிப் பலவற்றாலும் தனிச் சுவையும் தனித் தன்மையும் ஏற்பட்டு விடுகின்றன.

எழுத்தும் இப்படிப்பட்ட வேலைகளைப் பொறுத்து தனித் தன்மையும் தனி நயமும் தனி அழகும் பெறும்.

ஆகவே, எழுத்தில் தனித் தன்மை என்பது - ஒவ்வொருவர் எழுத்துக்கும் தனியானதொரு தன்மை சேர்வது.அவரவர் பார்வை, மனப் பண்பு, வாழ்க்கை மீதான சிந்தனை, அழகு உணர்வு, கற்பனைத் திறன், அனுபவத் தேர்ச்சி போன்ற பலவற்றாலும் நிகழ்வது ஆகும்.

இந்த அடிப்படை மீது தனி மிடுக்குடன் எழுகிற எழுத்துக்கள் ஆழம், கனம். உண்மையின் அழுத்தம் முதலியன பெற்று, வாசகனின் உள்ளத்தில் விசேஷமான பாதிப்பை உண்டாக்கக் கூடியதாக இருக்கும். -