பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

 பத்திரிகைத் தரமான வெறும் எழுத்துக்கள், ஒரு தரம் படித்து விட்டு மறந்து விடக் கூடிய விதத்திலேயே இருக்கும்.

அழுத்தமும் ஆழமும் கனமும் உள் ஒளியும் பெற்றுள்ள படைப்புக்கள் வாழ்க்கையை - அதன் பல்வேறு தன்மைகளை - நன்கு புரிந்து கொள்ளத் துணை புரியக் கூடிய எழுத்துக்களாக விணங்கும். திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் சக்தியை அவை பெற்றிருக்கும்.

இந்த விதமான ஆழ்ந்த, அனுபவ ஞான, எழுத்துக்களை எழுதும் ஆற்றலைப் பயின்று தேர்வதே எழுத்தாளர்களின் நோக்கமாக அமைதல் வேண்டும்.

இதற்கு புத்தகங்கள் படிப்பது மட்டும் போதாது. கவிஞர் சொன்னது போல, “விசாலப் பார்வையால் விழுங்கு உலகை, மக்களை!” என்ற போக்கும் வேண்டும். வாழ்க்கையை, மனிதர்க்ளை, சமூகத்தை நன்கு கவனித்து உண்மைகளை உணர வேண்டும். மனித நேயத்துடன் அவர்களை,உவர்களது பிரச்சனைகளை அணுக வேண்டும்.


3

எழுத்தாளர்கள் எதற்காக எழுதுகிறார்கள்?

இது ஒரு முக்கியமான கேள்வி. சுவாரஸ்யமானபதில்களைப் பெற்றுத் தரக்கூடிய கேள்வியும் கூட. இதற்கு எழுத்தாளர்கள் செல்கிற பதில்கள் விதம் விதமாக