பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

 அதனாலேயே அவர்கள் சீக்கிரம் விற்பனையாகிவிடக் கூடிய புத்தகங்களை வெளியிடுவதில் கருத்தாக இருக்கிறார்கள்.

தங்களைத் தாங்களே செம்மைப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான யோசனைகளைக் கூறும் புத்தகங்கள் ( ஸெல்ப் இம்ப்ரூவ்மெண்ட் புக்ஸ் ), நாட்டு வைத்திய முறைகள், சமையல் கலை நூல்கள். சோதிடவகைப் புத்தகங்கள். ஆன்மீக நூல்கள் (மதம். கடவுள், ஆத்ம தத்துவம் போன்ற விஷயங்களை மேலோட்டமாக, எளிய முறையில் எடுத்துச் சொல்பவை) - இவை தான் அதிகம் விற்கின்றன. அடுத்தபடியாக, விளம்பரப் புகழ் பெற்ற ஒரு சில எழுத்தாளர்களின் நாவல்களும் சிறுகதைகளும் சில கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளும் வாசகர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாள்ர்கள், புத்தகக் கண்காட்சி நடத்துகிறவர்களது அனுபவங்கள் மூலம் தெரிய வருகிற நடப்பு உண்மைகள் இவை.

நூலகங்களை நம்பித்தான் தமிழ் நாட்டில் புத்தக பிரசுர முயற்சிகள் வாழ்கின்றன. தனி நபர்கள் சொந்த உபயோகத்துக்கென்று புத்தகங்கள் வாங்குவது மிகவும் குறைவு. -

கடந்த காலத்தை விட இது வெகுவாகக் குறைந்து விட்டது என்று கூட சொல்லப்படுகிறது. 1940கள் 50 களில் தனி நபர்களிடையே, புத்தகங்கள் வாங்கி வாசிக்கிற பழக்கம் அதிகம் இருந்தது. -

வை. கோவிந்தன் என்ருெரு பிரசுரகர்த்தார் . பத்திரிகைத் துறையிலும், புத்தக வெளியீட்டிலும், பலருக்கு