பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71.

 முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கி சாதனைகள் புரித்தவர்.

சக்தி என்றொறு தரமான மாத இதழை - டைஜஸ்ட்” பாணியில் - வெகுகாலம் நடத்தினார் வை.கோ. அணில் என்ற குழந்தைகள் பத்திரிகையை நடத்தி வழிகாட்டினார். பிறகு தொகுப்பு மலர்'கள் வெளியிட்டார். சக்தி பிரசுராலயம்' என்ற பெயரில் புத்தக வெளியீட்டில் அரும் பெரும் காரியங்கள் செய்தார். . நல்ல புத்தகங்களை, பெங்குவின் புக்ஸ்’ மாதிரி, குறைந்தத விலையில் வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயலாற்றியவர் வை.கோ. சிந்தனை நூல்கள், அறிவு வளர்ச்சிக்கு வகை செய்யும் புத்தகங்கள் முதலியவற்றை உயர்ந்த பதிப்புகளாக அவர் வெளியிட்டார். பாரதி பாடல்கள், திருக்குறள் (மூலமும் உரையும்) பிரதாபமுதலியார் சரித்திரம் சுகுணசுந்தரி, கம்பராமாயணம்: சுந்தரகாண்டம் ஆகியவற்றை ஒரு ரூபாய் விலையில், மலிவுப் பதிப்புகளாகத் தயாரித்து, வெளியிட்டார். அதன் மூலம் இதர பிரசுரகர்களும் மலிவு விலை நூல்கள் வெளியிடுவதற்கு வழி வகுத்துக் கொடுத்தார்.

அப்போதெல்லாம் மொத்தமாக நூலக ஆர்டர்கள் புத்தக வெளியீட்டாளர்களுக்குக் கிடைத்தது இல்லை. தனி தபர்கள் கணிசமான அளவில் புத்தகங்கள் வாங்கியதாகவே தோன்றியது. இது குறித்து வை. கோவிந்தன் அடிக்கடி சொல்வார்:

ஹிந்து பத்திரிகையில் புக்ஸ்ரிஸிவ்ட் என்று ஒரு பகுதி வருகிறது அல்லவா? அதில் புதிய புத்தகங்களின் பெயர் இடம் பெற்றாலே போதும், அந்தப் பத்திரிகை