பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


வசதியுள்ளவர்களும் மத்தியதர வர்க்கத்து ஆண்களும் பெண்களும், இளைஞர்களும். ஆனால், புத்தகங்கள் வாங்குவதற்கு பணம் ஒதுக்க வேண்டும் என்றாலே அவர்களுக்கு மனம் வருவதில்லை; கை கூசுகிறது.

ஆங்கிலம் படித்த இளைஞர்கள் விலை உயர்ந்த சஞ்சிகைகள் வாங்குகிறார்கள்; சுவாரஸ்யமான ஆங்கிலக் கதைப் புத்தகங்களை நிறையவே வாங்குகிறார்கள். ஆனால், தமிழ் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கத் தயங்குகிறார்கன். இரவல் பெற்றோ, நாலகங்களில் புத்தகம் எடுத்தோ படித்துக் கொள்கிறார்கள்.

வாங்கும் சக்தி பெற்ற கல்லூரிப் பேராசிரியர்களில் பெரும்பாலோர் சொந்தத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கு மனம் கொள்வதுமில்லை; பணம் செலவு செய்வதும் இல்லை.

நாட்டு மக்களின் மனநிலை இப்படி இருக்கையில் புத்தக விற்பனை எப்படி அதிகரிக்கும்? புத்தகப் பிரசுரம் தான் நல்ல முறையில் வளர்வது எங்ஙனம்?

நம் நாட்டில் வாசகர்களின் தரம் உயர வேண்டும் என்பது மட்டுமில்லை. அவர்களின் மனப் பண்பும் போக்கும் மாறியாக வேண்டும். புத்தகங்கள் வாங்கும் பழக்கம் பரவலாக வளர வேண்டும்.

1950 கள் 60களில், தலைவர் சி. என். அண்ணாதுரை மேடை தோறும் கூறி வந்தார் : பத்திரிகைகள், புத்தகங்களை வாங்கிப் படிக்கிற பழக்கம் அதிகமாக வேண்டும். இயக்கத் தோழர்கள் எழுதுகிற நூல்களை எல்லோரும் அவசியம் வாங்க வேண்டும். தாங்கள் வாங்கிப் படிப்பதோடு அமையாது, புத்தகங்களை வாங்கி, மற்றவர்களுக்கு