பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


அன்பளிப்பாக வழங்க வேண்டும். திருமணம், புதுமனை புகு விழா போன்ற விசேடங்களுக்கு பணம் அளிப்பதை விட, புத்தகங்களாக வாங்கிப் பரிசளிக்கி வேண்டும். இப்படி எல்லாம் செய்வதன் மூலம், புத்தக விற்பனை அதிகரிக்கும் என்பதோடு நமது எண்ணங்கள், சிந்தனைகள், நல்ல - கருத்துக்கள் எங்கும் பரவுவதற்கும் வழி ஏற்படும், என்று.

அவர் பேச்சுக்கு நல்ல பலன் இருத்தது. அவருடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புத்தகங்கள் வாங்குவதிலும் படிப்பதிலும், மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஒரு காலகட்டம் வரை.

புத்தகங்களை வாங்கிப் படிக்கிற விஷயத்தில் மக்களிடையே ஒரு புத்துணர்வும் எழுச்சியும் தேவை.


5


தற்காலத்தில் பத்திரிகைகள் நிறைய நிறைய வருகின்றன. மேலும் மேலும் புதுப் பத்திரிகைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன: புத்தகங்களும் வாரம் தோறும், கண்ணிக்கையில் மிக அதிகமாகவே பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.

மேலோட்டமாகப் பார்க்கிற போது நிலைமைகள் சீராக, வளமாக, நல்லபடியாக இருப்பதாகவே தோன்றும். ஆனாலும், அவ்வத் துறைகளில் ஈடுபட்டவர்கள், உண்மைகளை