பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

வெளியிடுகிறது. இந் நற்பணியை ‘இலக்கியச் சிந்தனை’ பதினேழு வருடங்களாகத் தொடர்ந்து செய்து வருகிறது.

அதே ‘இலக்கியச் சிந்தனை’ - சமீப சில வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் நல்ல நாவல் (அல்லது நாடகம், ஆய்வு நூல், வாழ்க்கை வரலாறு, கவிதை - நூல்) ஒன்றை தெரிந்தெடுத்து, அதன் படைப்பாளிக்கு ஐயாயிரம் ரூபாய் அன்பளிப்பு தருகிறது. (அநேகமாக இது ஒரே எழுத்தாளருக்கு வழங்கப்படுவதில்லை. பல வருடங்களில், மிகச் சிறந்த நாவல், தங்கள் பார்வைக்கு வரவில்லை என்பதால், பரிசுத் தொகையை இரண்டு புத்தகங்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறோம் எனக் கூறி, 2500 ரூபாய் வீதம் இரண்டு படைப்பாளிகளுக்கு வழங்கிவிடுகிறார்கள்.)

இவை போக, வெளி மாநிலங்களில் உள்ள சில அமைப்புகள் அவ்வப்போது தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் பரிசு வழங்குவதை தங்கள் செயல் திட்டங்களில் ஒன்று ஆகக் கொண்டுள்ளன.

மேலும், தமிழக அரசுப் பரிசுகள் வேறு: திரு. வி. க. நினைவுப் பரிசு பத்தாயிரம் ரூபாய்; கவி பாரதிதாசன் பரிசு பத்தாயிரம்; தமிழ் வளர்ச்சிக்கு வகை செய்கிற புத்தகத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் என்று பல புத்தகங்களுக்குப் பரிசு --

இவற்றை எல்லாம் எண்ணினால், தமிழ் எழுத்தாளர்களின் - நிலைமை, பொறாமைப்பட வேண்டிய அளவுக்கு வெகுவாக முன்னேறி விட்டது என்றே சத்தோஷப்பட வைக்கும்.