பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரி

11

பளிச்சென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பாகனை அழைத்துத் தேர்க் குதிரைகளை அவிழ்த்து ஓட்டிவிடச் சொன்னான். பிறகு தேரை இழுத்து அந்தக் கொடிக்கருகில் கொண்டு வந்து நிறுத்தச் சொன்னான்; தானும் ஒரு கை கொடுத்தான். அருகில் நின்ற தேரின்மேல் அந்தப் பூங்கொடியை எடுத்துவிட்டான். அப்போது அவனுக்கு உண்டான இன்பத்தை எப்படிச் சொல்வது?

பாரிக்கு இந்தச் சிறிய கொடிக்குத் தேரைப்பற்றுக் கோடாக வைக்கலாமா என்ற எண்ணமே தோன்றவில்லை. அந்தக் கொடியின் தளர்ச்சி ஒன்றே அவன் கண்ணிலும் கருத்திலும் நின்றது. அருகில் எது இருந்