பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

எழு பெரு வள்ளல்கள்

முடித்துக் கொள்கிறவர்கள் புலவர்கள். அவர் களுக்குப் பரிசு பெரிதன்று; தரம் அறிந்து பாராட்டும் வரிசைதான் பெரிது. அதற்காகவே அவர்கள் ஏங்கிக் கிடப்பார்கள். அத்தகைய பரிசிலர்களுக்கு அடையாமல் திறந்து வைத்திருக்கிற வாசலைக் காப்பவனே! உன்னுடைய அரசனாகிய நெடுமான் அஞ்சி தன் பெருமையைத் தான் அறியவில்லையோ? வந்தவர்களைக் காக்க வைப்பது அவன் பெருமைக்கு இழுக்கு என்பதைத் தெரிந்துகொள்ள வில்லையோ? அது கிடக்கட்டும். என்னையும் அவன் அறிந்துகொள்ள வில்லையோ? பிச்சைக்காரியைப் போலக் காத்திருக்கும் பேர்வழி நான் அல்லள் என்பதை அவன் உணர வில்லையே! அறிவுடையோரும் புகழுடையோரும் இந்த உலகத்தில் தோன்றுகிறார்கள்; மறைகிறார்கள். பிறகு யாரும் தோன்றாத சூனிய உலகம் அன்றே? எத்தனையோ பேர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கையில் கோடரியை யுடைய தச்சன் பெரிய காட்டில் மரத்தைத் தேடி அலையவா வேண்டும்? உபகாரியைத் தேடி நான் அலைய வேண்டியதில்லை. எந்தத் திக்கிலே சென்றாலும் அந்தத் திக்கிலே சோறு கிடைக்கும்" என்று பாடினார்.

பாட்டு முடிவதற்கும் அதிகாரி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஒளவையார் பாடிக்கொண்டிருந்த போது அங்கே வந்த அதிகாரி அப் பெருமாட்டியின் கோபத்தை உணர்ந்து ஓடிச் சென்று அதிகமானிடம் தெரிவித்தார். உடனே அதிகமான் வந்து விட்டான்.

"நான் செய்த பிழையைப் பொறுக்க வேண்டும். மிகவும் இன்றியமையாத கடமை இருந்தது. அதனால்