பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

த. கோவேந்தன்



தராமலிருப்பதற்காகக் கபட வார்த்தை கழறாதே! இதுவரை ஏமாற்றியது போல, இன்னும் ஏமாற்ற இயலாது. இப்போதே பயிற்சி தொடங்கட்டும்!

கண்ணன்: சீமாலிக! பிடிவாதம் செய்கின்றாய்! வஞ்சகத்தால் நான் மறுக்கவில்லை. அபாயம் வருமே என்று அஞ்சுகின்றேன் ஆயினும் நீ பிடிவாதம் பிடிக்கின்றாய் சரி! ஆகிறபடி ஆகட்டும். கற்றுத் தருகின்றேன்.

(கற்பிக்கத் தொடங்கல்)

சீமாலிகா, நிமிர்ந்து நில்! ஏறுபோல் பார்வையை என் மேல் வை சரி வலது கையை மடித்து மேல் நிறுத்து சுட்டுவிரல் தவிர, மற்ற விரல்கள் மடக்கு மடக்கிவிட்டாயா? சுட்டுவிரலை வானம் நோக்கி நீட்டு இப்போது தான் ஆபத்தான கட்டம், அஞ்சாதே இந்தச் சக்கரத்தைச் சுட்டு விரலின் துனியில் சாயாமல் நிறுத்து! நிறுத்தி விட்டாயா?

எங்கே இலேசாகச் சக்கரத்தைச் சுழற்று சக்கரம் சுழல்கின்றதா? சுட்டுவிரல் கழுத்தோரம் வாராமல் எட்டியே இருக்கட்டும் சுட்டுவிரல் கழுத்தோரம் வந்துவிட்டால், சக்கரம் கழுத்தை அறுத்துவிடும்! எச்சரிக்கையாயிரு சக்கரம் வேகமாகி வருகின்றது சுட்டுவிரல் கழுத்தோரம் வரும்போல் தோன்றுகின்றது. எச்சரிக்கை!

சீமாலிகன்: கண்ணா சக்கரத்தோடு சேர்ந்து என் தலையும், சுழல்கின்றதே! மயக்கமாக வருகின்றதே ஐயோ! நிற்க இயலவில்லையே!

கண்ணன்: சற்றுப்பொறு சக்கரம் சுழலாமல் நிறுத்தக் கற்றுத் தருகின்றேன். .....ஐயையோ சீமாலிகா எத்தனை முறை எச்சரிக்கை செய்தும், சுட்டு விரல் கழுத்தோரம் வந்துவிட்டதே! ஐயோ! கழுத்து....