பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

95



(சீமாலிகன் கழுத்தைச் சக்கரம் அறுத்து விடுகின்றது. தலைவேறு தான் வேறாகக் கீழே விழுகின்றான். நாராயண! நாராயண! என்ற ஒலி எழுகின்றது. நாரதர் தோன்றுகின்றார்)

நாரதர்: கண்ணா என்ன சக்கரப்பயிற்சி துக்கப் பயிற்சியாகி விட்டதா!

கண்ணன்: தோழனைப் பிரிந்து துயர் உறும் போது, ஏளனம் செய்யவா வந்தீர்! நாரதரே! நண்பனை இக்கோலத்தில் கண்டு புண்படும் வேளையிலே ஏளனம் செய்யவா வந்தீர்? நாரதரே! ஐயகோ! பொறுக்க இயலவில்லையே! (கண்களில் நீர் அரும்ப, குரல் தழுதழுக்க) சீமாலிகா முரட்டுப் பிடிவாதத்தால் வாழ்வை முடித்துக் கொண்டாயே! வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் விதி வலியால் இந்த விபரீதத்துக்கு ஆளானாயே! ஐயோ! நண்பா இனி என்று காண்பேன்!

நாரதர்:' கண்ணா! நடக்க வேண்டியது தான் நடந்துள்ளது. எதிர்பார்த்தபடி எல்லாம் முடிந்தது. ஆயர்பாடியின் அல்லல் அகன்றது. நாரதன் சொன்னது நடந்தே தீரும். தோழமைத் துரோகம் உன்னைச் சேராமல், சீமாலிகன் தன் முடிவைத் தானே தேடிக் கொண்டான். இவன் முடிவு கண்டு இன்புறுவோர் பலர். துன்புறுவோன் நீ ஒருவன் மட்டுமே!

இஃது என்ன விந்தை! மானிடனாய் அவதரித்தும் மானிடரினின்றும் மாறுபட்டு நடக்கலாமா? அறம் தலை நிறுத்தவந்த தனி முதலான உன் செயல்கள் பெருவியப்பாக அன்றோ உள்ளது. வாழ்க நின் திருவிளையாடல் வாழ்க நின் அருட்பெருங்கீர்த்தி நாராயண! நாராயண! (நாரதர் மறைகின்றார்).

ஒம்