பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

99



34. தமிழ்ப்பெண் நப்பின்னை


கண்ணன் வடமதுரையில் பிறந்தவன். வடபகுதிக்கு உரிய தெய்வமாகிய அவனைத் தமிழர் தமக்குரிய தெய்வமாகவே உரிமை கொண்டாடினர். கண்ணன் வரலாறுகள் பல செவிவழிச் செய்திகளாக கிழங்கி வரலாயின.

கண்ணனுக்குத் தமிழ் நாட்டோடு நீங்காத தொடர்பு ஏற்படுத்தி விட வேண்டும் என்ற ஆர்வத்தால் கற்பித்துக் கொண்டதுதான் நப்பின்னை வரலாறு.

வடநாட்டுக் காவியங்களில் கண்ணன் காதலியாக இடம் பெறுபவள் இராதை மட்டுமே! நப்பின்னை என்ற பெயரே அங்குள்ளார் அறியார்.

கண்ணனுக்கு மனைவியர் எண்ணிலர். அவருள் உருக்குமணி, சத்தியபாமை, ஜாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியை, பத்திரை, லஷ்மணை என்ற எண்மர் பட்டத்தரசிகள்.

இவருள் நப்பின்னை சேர்க்கப்படவில்லை. ஆனால் சங்க காலத்துக்கு முன்பிருந்தே, நப்பின்னை வரலாறு தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது. நப்பின்னை என்பது தனித்தமிழ்ப் பெயர். அதனை உபகேசி என்று வடமொழி கற்ற தமிழ்ப்புலவர் நல்கூர் வேள்வியார் என்பவர் குறிப்பிடுகின்றார்.

“உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான். உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப” என்பது திருவள்ளுவமாலையில் உள்ள பாடல். உபகேசி என்பது நப்பின்னைப் பிராட்டியார் என்று நேமிநாத உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இந்த நப்பின்னைப் பிராட்டி யமுனை யாற்றங்கரையில் தன்னை வஞ்சித்த கண்ணனைத் தன் அழகில் ஈடுபடச் செய்து