பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

103


கம்சனைக் கொன்று மகாபாரதப் போர் முடித்த பின்பு, கண்ணபெருமான் துவாரகையில் வாழ்ந்து வந்தான். உருக்குமணி, சத்தியபாமா முதலிய தேவியரும் வாசுதேவன், தேவகி ஆகிய பெற்றோரும் உடனிருந்தனர்.

ஒருநாள் தேவகியின் முகத்தில் வாட்டம் கண்ட கண்ணன், “அம்மா! உனக்கு என்ன கவலை? எதுவாயிருந்தாலும் தீர்த்து வைக்கின்றேன்” என்றான்.

“மகனே! நீ இளம் பருவத்தில் செய்த விளையாட்டுக் குறும்புகளைக் காணும் பேறு எனக்குக் கிட்டவில்லை. எல்லாம் தெய்வமங்கை யசோதை பெற்றாள். அவள் பெற்ற பேறு கிட்டாதா?” என்று ஏங்குகின்றேன். என்றாள் தேவகி.

“தாயே! உன் ஏக்கத்தை இப்போதே தீர்த்து வைக்கின்றேன்” என்று மழலைப் பருவ வேடம் கொண்டான் கண்ணன்.

தேவகி தயிர் கடையும்போது, “அம்மா எனக்கு வெண்ணெய் தா! இல்லையேல், நானே முழுவதும் எடுத்து உண்டுவிடுவேன்! என்றான் கண்ணன்.

தேவகி இழந்தசெல்வம் மீண்டும் பெற்றவள் போல் பெருமகிழ்வு கொண்டாள்.

“கொஞ்சம் பொறு! நெய்யாக்கித் தருகின்றேன்” என்றாள் தேவகி

கண்ணன் தயிர் கடையும் கயிற்றைப் பறித்துக் கொண்டு ஓடினான். தேவகி துரத்தினாள்.

கண்ணன் பயந்தவன் போல் வீடு முழுவதும் சுற்றிச் கற்றி ஓடினான். முடிவில் மத்தை எடுத்துத் தயிர்ப் பானையை உடைத்து விட்டான். தயிர் எல்லாம் சிதறியது.

கண்ணனின் குறும்பு கண்ட தேவகி தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்.