பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

105



36. பாமாவின் பக்தி


கண்ணன் துவாரகையில் ஆண்டு கொண்டிருந்த போது. சத்தியபாமா ஒருநாள், பாரிஜாத மலரை விரும்பினார்.

உடனே கண்ணன் தேவலோகம் சென்று, அம்மலரைக் கொணர்ந்து பாமாவிடம் கொடுத்தான்.

இதைக் கேள்விப்பட்ட உருக்குமணிக்குக் கண்ணன்மேல் ஊடல் பிறந்தது.

தானே பேரழகி என்பது உருக்குமணியின் எண்ணம். இவ்வளவு அழகியாகிய எனக்குக் கிடைக்காத மலரைப் பெறப் பாமாவுக்கு என்ன தகுதி உண்டு என்று எண்ணினாள்

இதே சமயம் கண்ணன் கருடனிடம் உரையாடிக் கொண்டிருந்தான். அவனிடம், அனுமனுடைய பக்திப் பெருக்கையும் ஆற்றல் மிகுதியையும் செயற்கரிய செய்து முடிக்கும் சீர்மையையும், கண்ணன் கூறினான்.

தன்னைவிடச் சிறந்தவன் அனுமன் என்று கூறியது கருடனுக்குப் பொறுக்கவில்லை. கேவலம் ஒரு குரங்கு என்னைவிட மேலானதாக இருக்க இயலுமா? என்று கருடன் எண்ணினான்.

ஒரே சமயத்தில் தோன்றிய உருக்குமணி, கருடன் ஆகிய இருவர் பொறாமையையும் நீக்கி விடவேண்டும் என்று கண்ணன் எண்ணினான்.

கருடனை அழைத்து நீ உடனே சென்று “இராமனும் சீதையும் அழைக்கின்றனர் என்று கூறி, அனுமனை அழைத்துவா!” என்று ஏவினான். கருடன் புறப்பட்டு விட்டான்.

பின்னர் உருக்குமணி, பாமா இருவரையும் அழைத்து, “இன்னும் சற்று நேரத்தில் அனுமன் வரப்போகின்றான். நாம் கண்ணனும் உருக்குமணி, பாமாவாகக் காட்சி தந்தால் அவன்