பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

111



ஆனால், வீமன் பிறர் ஏளனத்தைப் பொருட்படுத்தவில்லை. விரதம் காலையில் தொடங்கியது. காலைமணி 10 ஆனது. வீமனுக்குப் பசி பொறுக்க இயலவில்லை. கால் கைகள் அனைத்தும் சோர்ந்து போயின; கண் பஞ்சடைந்தது; காது அடைத்தது: பெருங்குடல் சிறுகுடலைக் கவ்வத் தொடங்கியது. இந்நிலையில் வியாசர் சொன்னபடி பால், பழம் முதலியன உண்ணத் தொடங்கினான்.

அந்த ஒரு வேளை அவன் உண்ட அளவு எவ்வளவு தெரியுமா?

ஏகாதசிப் புராணம் அந்த அளவைக் குறிப்பிடுகின்றது.

இனிய கதலிப் பழக்குலைகள்
     ஈரைஞ் நூறும் எழிற்பனசக்
கணிஆ யிரமும் முந்நூறு
     கட்டுக் கரும்பும் குலைஇளநீர்
தனி ஆயிரமும் முன்அருந்திச்
     மற்றும் பசிகள் தணியனாய்ப்
புனிதப் பசுப்பால் நீர் அருந்திப்
    போகாது உயிரைப் புறம்காத்தான்.

இப்பாடலே ஏகாதசிப் புராணம் காட்டும் உணவின் அளவு. இவற்றைப் பட்டியலிட்டுக்காண்போம்.

வாழைப்பழக் குலைகள் 1000

பலாப் பழங்கள் 1000

கரும்புக் கட்டுக்கள் 300

பெரிய இளநீர்க் குலைகள் 1000

இவை முதலில் காலை 10 மணிக்கு அருந்தியது மட்டும். இவ்வளவு உண்டும் வீமன் பசி அடங்கியதா? பசியை