பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

த. கோவேந்தன்


வாருங்கள். தாங்கள் இக்காரியம் செய்கின்றோம்" என்று ஆளுக்கொரு வாளியும் விளக்குமாறும் எடுத்துக் கொண்டு தலைவர்கள் தாரியத்தில் இறங்கினர்.

"கழிப்பிடப் பகுதியைப் பார்த்தேன். பொதுமக்கள் மட்டுமல்லர் அவர்களுக்கு வழிகாட்டவேண்டிய தலைவர்கள் கூடக் கண்ட கண்ட இடங்களில் அகத்தம் செய்கின்றனர். இதைச் சொல்லினால் திருத்த இயலாது. செயலால் தான் திருத்த இயலும் என்று தோன்றியது. அதனால்தான் இச்செயலில் இறங்கினேன்.

"மேடையில் மாலை போட்டுக் கொண்டு பேசுவதற்கும். கழிப்பிடம் சுத்தம் செய்வதற்கும் வேறுபாடே இல்லை. தொழில் என்ற முறையில் இரண்டும் சமந்தான். கூர்ந்து நோக்கினால் மேடையில் பேசுவதைவிடக் கழிப்பறையைச் சுத்தம் செய்வதே இன்றியமையாத தொழில். மேலான தொழில் என் சொல்லுக்குக் கூட இவ்வளவு பயன் விளைந்திருக்காது. செயல் பல தலைவர்களுடைய மனப்போக்கை மாற்றியமைத்துள்ளது கண்டு மகிழ்கின்றேன்" என்று அண்ணல் கூறிவிட்டு மேடையேறித் தம் கடமையைச் செய்தார்.