பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

15



7. கண்ணனும் குதிரைகளும்


பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தது. பகல் முழுவதும் பார்த்தனுக்குத் தேரோட்டுவான் பரந்தாமன்.

அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில் ஒய்வெடுத்துக் கொள்வர்.

பகல் எல்லாம் போரிட்ட களைப்பால் அர்ச்சுனன் பாசறையில் படுத்து நன்கு உறங்குவான்.

ஆனால் பகல் எல்லாம் தேர் ஒட்டிக் களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஒய்வு கொள்வதில்லை.

தேரை இழுத்து ஓடிக்களைத்த குதிரைகள் மேல் கவனம் செலுத்துவான் கண்ணன்.

வெந்நீர் வைத்துக் குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். குதிரைகளுக்கு இதமாயிருக்கும் பொருட்டு உடல் முழுவதும் பிடித்துவிடுவான். பச்சை அறுகு வெட்டி வந்து கட்டுக்கட்டாகக் குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். அடுப்பு மூட்டிக் கொள்ளை வேக வைத்து, வெந்த கொள்ளைத் தன் பட்டு உத்தரீயத்தில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் முன் நின்று அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் கொள்ளை வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அவை ஒய்வு கொள்ளும் போது, கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டித் தேரினைப் போருக்குச் செல்லத் தயாராக்கி விடுவான்.

ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடக்கும். ஒருநாள் அர்ச்சுனனுக்கு நள்ளிரவில் விழிப்பு வந்துவிட்டது. எழுந்து கண்ணன் தங்கிய பாசறைக்குச் சென்றான். அங்குக் கண்ணன்