பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

த. கோவேந்தன்


இல்லை. இந்நேரம் களைத்துத் தூங்காமல் கண்ணன் எங்கே போயிருப்பான் தேடினான்.

இறுதியில் கண்ணன் குதிரைக் கொட்டிலில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.

உடனே ஒடிச் சென்று கண்ணன் கைகளைப் பற்றிக் கொண்டான். “கண்ணா குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரையாவது விட்டால் செய்யமாட்டார்களா?”

“உன் அடிமையாகிய நான் ஒய்வாக உறங்குகையில் நீ உறங்காமல் பணி செய்து கொண்டிருப்பதா என்ன அபசாரம் இன்று, முதல் இப்பணி நீ செய்யாதே!” என்று அர்ச்சுனன் வேண்டிக் கொண்டான்.

“அர்ச்சுனா குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரையாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா?”

“அது மட்டுமல்ல! இப்போது நடக்கும் போர் முடியும் வரை நாம் மைத்துனன்மார் அல்ல. நீ எஜமானன். நான் நின் ஏவல் கேட்கும் சாரதி. ஆதலால், உன் கடமை போர் செய்வது. என்கடமை தேர் ஒட்டுவது”.

“குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில். மறுநாள் போருக்காக நன்கு ஒய்வு எடுத்துக்கொள்வது எஜமானன் தொழில்”.

“நம் இருவரின் தொழில் வேறுவேறாக இருந்தாலும், நம் தொழில் போர்த்தொழில் தான். ஆதலால் நாம் செய்யும் தொழிலில் ஏற்றத் தாழ்வு ஏது உனக்கு உரிய தொழில் மறுநாள் போரிடுவதற்கு ஒய்வெடுப்பது. எனக்கு உரிய தொழில் மறுநாள் தேரில் பூட்டக் குதிரைகளைப் பராமரிப்பது. இருவகைத் தொழிலும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றிகிட்டும்! ஆதலால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள் நான் என் கடமையைச் செய்ய இயலாமல் குறுக்கீடு செய்யாதே” என்றான் கண்ணன்.