பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

த. கோவேந்தன்


தருமனுக்குத் தன்னை இகழ்ந்த மாவலிபால் சினம் தோன்றவில்லை. தன்னைக் கருவப் படுகுழியிலிருந்து மீட்ட உபகாரி என்று அவனை, அவன் மனம் பாராட்டியது.


 “பசு, பால்அளவை மடியில் மறைப்பதுபோல்,

வழிப்போக்கன், மடியில் பணத்தை மறைப்பதுபோல்,
 
உழவு செய்தவன், விதைநட்டு மண்ணால்

மூடுவதுபோல் நற்செயலால் உனக்கு

வரும் பெருமையை மறை”

ஞானேச்வரி.