பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

23



10. அர்ச்சுனன் அகந்தை


கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பன் காண்டீபன். கண்ணன் திருவாயால் கீதை உபதேசம் கேட்ட அவனிடமும் அகந்தை சிறிது தலை நீட்டியது. .

அடியார்க்கு அருள் செய்வதைக் காட்டிலும் அவர்களிடமுள்ள அகந்தையை ஒழிப்பதையே கண்ணன் சிறப்பாகக் கருதுவான். அருளுக்கு உரியவரையும் அகந்தையானது அண்ணாத்தல் செய்யாத அளற்றில் (உண்டவரை மீள விடாத நரகத்தில்) தள்ளிவிடுமே! என்பது கண்ணன் நினைவு.

“நான் கண்ணனுக்கு நெருங்கிய நண்பன். கண்ணனுக்கு வேண்டிய பணிவிடைகள் அனைத்தும் செய்கின்றேன். கண்ணன் எது கேட்பினும் தருகின்றேன். என் உறுப்புக்களில் எதனைக் கேட்டாலும் தருவேன். ஆதலால் கண்ணனுக்கு என்னை விட உற்றாரோ உறவினரே யாரும் இருக்க இயலாது” என்பது அர்ச்சுனன் கொண்ட அகந்தை.

ஐயப்படாது அகத்தது உணர்கின்ற தெய்வமாகியவன் அன்றோ கண்ணன், அர்ச்சுனன் மனநிலை அறியாமல் போவானோ?

ஒருநாள் “அர்ச்சுனா! நாம் இருவரும் சற்று நேரம் உலாவப் போய் வருவோம்” என்றான் கண்ணன்.

இருவரும் சிறிது தூரம் சென்றனர். ஒரு சிறு குடிசை எதிர்ப்பட்டது. அந்த வீட்டில் கணவன், மனைவி, மகன் ஆக மூவர் மட்டும் இருந்தனர்.

கண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் எழுந்து வந்து காலில் விழுந்து வணங்கி, விரிப்பிட்டு அமரும்படி வேண்டினர்.

“இறைவா! பல்லாயிரம் வருடங்கள் தவம் செய்து முனிவர்களும் தேவர்களும் காண இயலாத நின்காட்சி, எங்களுக்கு