பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

43



17. உயர்ந்த வேள்வி


பாரதப் போர் முடிந்தது. தருமன் முடி சூடினான். அரசர்க்கரசன் ஆதல் வேண்டும் என்னும் அவாவினால் அசுவமேத வேள்வி ஒன்று செய்தான்.

யாக முடிவில் வந்தவர் அனைவர்க்கும் வாரி வாரிப் பொன்னும் பொருளும் வழங்கினான்.அறுசுவை உண்டி அளித்தான் என்று சொல்லவும் வேண்டுமோ!

தருமன் தானம் வழங்கிக் கொண்டிருந்த போது ஒரு கீரி வந்தது. அது ஓர் அதிசயக் கீரி, அதன் உடலில் பாதி பொன்மயமாயிருந்தது.

அந்தக் கீரி, அங்குக் கூடியிருந்தவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கியது:

“இந்த அசுவமேத வேள்வி வெகு சிறப்பாக நடந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆயினும் ஓர் ஏழை அந்தணன் குடும்பத்தார் செய்த வேள்விக்கு இது ஈடாகாது” என்றது. கீரி,

“அதிசயக்கீரியே இந்த வேள்வியை விடச் சிறப்பாக ஓர் ஏழை அந்தணன் என்ன செய்திருக்க முடியும்? நீ ஏதோ உளறுவது போல் தெரிகின்றது” என்றனர் அவையினர்.

“அந்த அந்தணன் செய்த வேள்வி பற்றிக் கூறுகின்றேன். அறிந்த பின்பு, கருத்தைக் கூறுங்கள். அவசரப்பட்டு ஏதும் பேசாதீர்கள்!” என்றது கீரி.

“ஓர் ஏழைப் பிராமணன் குருநிலத்திற்கு அருகில் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தான். அவன் குடும்பத்தில், அவன், அவனுடைய மனைவி, மகன், மருமகள் ஆக நால்வர் இருந்தனர்.

“அந்த அந்தணன் அறுவடை வயல்களில் சிந்திக் கிடக்கும் தானியமணிகளைப் பொறுக்கி வருவான். அவன் மனைவி அதைக்