பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

த. கோவேந்தன்



26. குடிசையை எரித்த நெருப்பை கும்பிட்டு நின்ற பக்தர்


“நிற்கின்ற தெல்லாம் நெடுமால்என்று ஓராதார்

கற்கின்ற தெல்லாம் கடை”

என்றார் திருமழிசை மன்னன்

“பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம்” என்றார் தாயுமானார்

“அறியும்செந் தீயைத்தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்” என்றார் நம்மாழ்வார்

“தீக்குள் விரலையிட்டால் நந்தலாலா - உன்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

என்று வழிமொழிந்தார் பாரதியார்

தம் குடிசையை எரித்த நெருப்பை நெடுமால் என்று வணங்கி நின்றார் ஓர் அடியார்

அவர் பெயர் நாம தேவர்

நாமதேவருக்கு ஒரு கூரைச் சிறுகுடில்தான் இருப்பிடம் ஒரு நாள் குடில்மேல் வேய்ந்திருந்த புல்லில் நெருப்புப் பற்றிக் கொண்டது நெருப்பின் செந்நாக்குகள் நீண்டு குடிசையைச் சாம்பலாக்கும் காட்சியைக் கண்டார் நாமதேவர்.

தமக்குள்ள ஒரே குடிசை வெந்து அழிகின்றதே என்று அவர் வருந்தவில்லை குடிசையை எரித்து வானுயர நிமிரும் நெருப்பை, நெடுமாலின் பொன்மேனி என்று எண்ணினார்

“இறைவா! இந்த ஏழையையும் பொருட்படுத்தித் திருக்காட்சி தருகின்றாயே இதற்கு அடியேன் என்ன கைம்மாறு செய்வேன்!”