பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

75



ஞானிகள்,

“ஊன்வாட உண்ணாது உயிர்காவ லிட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும்நொந்து

தாம்வாட வாடத் தவம் செய்தும்”

பெறுவதற்கரிய பரமபதம், பெற்றோரைத் தெய்வமாகக் கருதிப் பணிவிடை செய்த ஒரு செயலாலேயே, நாய் தின்னும் புலையன் எளிதிற் பெற்று விட்டான்.

தவம் செய்து பெற இயலாததைத் தொண்டினால் பெற இயலும் என்பதற்கு இவ்வரலாறு எடுத்துக்காட்டு