பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

த. கோவேந்தன்


அல்லவா? நான் ஒலிக்கலாகாது என்று இருந்தாலும் நெடுநாளாகத் தொடர்ந்து வரும் வழக்கம் மாறுமா? மாற்றத்தான் முடியுமா? மாற்றுவது மரபு ஆகுமா?” என்று மணி விரிவுரை நிகழத்தியது

அதற்குள் ஆயச்சியர் மணியோசை கேட்டு ஓடிவந்து, கண்ணனைப் பிடித்துக் கட்டி தாய் யசோதையிடம் புகார் செயய் அழைத்துச் சென்றனர்

இத்தகைய எத்தனையோ சுவையான கண்ணன் விளையாடலைப் பற்றிய செய்திகள் நாட்டுப்புறக் கதைகளாக வழங்கி வருகின்றன

பெரியாழ்வாரும், பாரதியாரும் பல கற்பனைகள் கலந்து கண்ணன் திருவிளையாடல்களுக்கு மெருகூட்டியுள்ளனர்