பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

83


எல்லோரும்: சறுக்கலாம் சீமாலிகன் குறி தவறாது (சற்றுத் தொலைவில் ஒரு மான் ஓடுவதைக் கண்டு) அதோ பார் ஒரு மான்! இதோ என் அம்பு! (அம்பு எய்கின்றின் அதிலும் குறி தவறி விடுகின்றது அம்பு மான்மேல் படாமல் மரத்தின்மேல் படுகின்றது.)

எல்லோரும்: பரிகாசமாகக் கைதட்டுகின்றனர்.

ஒருவன்: சபாஷ்! சீமாலிக! உன்குறி என்றுமே தவறாது. மானைக் குறி வைத்தால் மரத்தைத் தாக்கும்.

இன்னொருவன்: குறி தவறாமல் எய்வதற்கு இவன் என்ன அந்தக் கண்ணனோ?

சீமாலிகன்:மீண்டும் மீண்டும் கண்ணன் பெயரைக் கூறி என் ஆத்திரத்தைத் தூண்ட வேண்டாம் கண்ணன் மட்டும் குறி தவறவிட மாட்டானோ? பாருங்கள்! அந்தக் கண்ணனிடமே சென்று அவன் அறிந்த வித்தை அனைத்தும் கற்று, அந்தக் கண்ணனையே வென்று காட்டுகின்றேன். இது சத்தியம் இந்தச் சபதம் நிறைவேறாமல் நான் திரும்பமாட்டேன் இதோ! இப்போதே செல்கின்றேன். (யமுனையை நோக்கி ஒடுகின்றான்)

எல்லோரும்: சீமாலிக! இது என்ன விபரீதச் செயல்! யமுனைநதி கரை புரண்டோடுகின்றது அதில் இறங்காதே! இறங்காதே! (சீமாலிகன் ஆற்றில் குதித்து விடுகின்றான்) ஐயோ விளையாட்டு விபரீதமாகி விட்டதே! வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்துவிட்டானே!

[திரை]