பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

85



கண்ணன்: (யமுனையைச் சுட்டிக்காட்டி) அங்கே பாருங்கள். யமுனையின் பெருக்கையும் பொருட்படுத்தாமல், யாரோ ஒருவன் அக்கரையிலிருந்து நீந்தி வருகின்றான். சற்றுப் பொறுங்கள். யார் என்று தெரிந்து கொள்வோம். (நீந்திக் கரையேறிய சீமாலிகன், ஈரத்துணியுடன் மூச்சு வாங்கக் கண்ணன் எதிரே வருகின்றான்)

கண்ணன்: நண்பா! நீ யார் ஏன் இந்த வெள்ளத்தில் உயிரையும் மதியாது. நீந்தி வந்தாய்! நல்லகாலம் எப்படியோ உயிர் தப்பி வந்து சேர்ந்தாய்! இதோ இந்த மேல் துண்டை உடுத்துக் கொண்டு உன் ஈர உடைகளை மாற்று.

சீமாலிகன்: கண்ணா! உன் பொன்னடிகளில் பற்றுவைப்போர் பிறவிக் கடலையே கடந்து விடுகின்றனரே !கேவலம் ஓர் யமுனையைத் தாண்டியது அதிசயமா? உன் திருவருள் கிட்டுமாயின், இந்த யமுனை மட்டுமா ஏழு கடல்களையும் அல்லவோ தாண்டுவேன். (துணிகள் மாற்றிக் கொள்கின்றான்)

கண்ணன்: நண்பா! உன் அன்பு என்னைப் பரவசப் படுத்துகின்றது. யமுனை நதி கடந்து வந்து என்னை அன்பு நதியில் மூழ்கடிக்கின்றாய்! என்னால் உனக்கு ஏதேனும் ஆக வேண்டுமானால் கூறு செய்கின்றேன்.

சீமாலிகன்: கண்ணா! உன்னிடம் ஏதேனும் பெற்றுச் செல்வதற்காக நான் இங்கு வரவில்லை. உன் திருவடிகளில் தொண்டு செய்து புனிதனாகும் அவாவினாலேயே இங்கு வந்தேன்.

கண்ணன்: அன்பா உன் விருப்பம் எதுவாயினும் நிறைவேறும்! நீ இன்றுமுதல் உன் உயிர்