பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

த. கோவேந்தன்



நண்பன் உன் நலமே என்நலம் வா நம் வீட்டுக்குப் போவோம்

சீமாலிகன்: என் பாக்கியமே பாக்கியம் பிறவிப் பெரும்பயன் இன்றே கிட்டியது (போகின்றனர்)

சீமாலிகன்: (தனக்குள்) கண்ணனை எளிதில் வசம் செயது விட்டேன். இனிக் காரியம் கைகூடத் தடை இல்லை


காட்சி-3
இடம்           ஊர்ப் பொது மன்றம்
காலம்          பகல்
பாத்திரங்கள்   ஆயர் பெருமக்கள்


தலைவர்: நாம் இங்கு ஏன் கூடியுள்ளோம் என்பதனை நீங்கள் அறிவீர்கள் சீமாலிகன், கண்ணனுடன் நட்புப்பூண்டு, நம் ஆயர்பாடிக்கு வந்தது முதல் அவன் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. அவனை அடக்குவதற்கு-வழி காண வேண்டும் அதைப் பற்றி ஆலோசனை செய்யவே இங்குக் கூடியுள்ளோம்.

ஒருவர்: ஐயன்மீர்! என் மகள் தண்ணீர் எடுக்கப் போகும் போது, வழிமறித்து அடாத சொற்களைக் கொட்டியிருக்கின்றான்.

மற்றொருவர்: அவன் வந்தது முதல், நம் மாடுகளில் பல நாடோறும் காணாமல் போகின்றன அவன் தான் அதற்குக் காரணம் என்று கருதுகின்றேன்

இன்னொருவர்:நாம் வேலைக்குச் சென்ற பிறகு, நம் வீடுகளில் பல பொருள்கள் காணாமல் போய் விடுகின்றன. இந்நாள் வரை காரணம் தெரியாமல் இருந்தோம். இப்போது தான் புரிகின்றது சீமாலிகன் திருவிளையாடல் என்று