பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

91



காட்சி - 5
இடம்           :    ஒரு சோலை 
காலம்          :    மாலை 
பாத்திரங்கள்   :    நாரதர், சீமாலிகன் 

(சீமாலிகன் ஒரு மேடையில் அமர்ந்துள்ளான். நாரதர் வருகின்றார்)


சீமாலிகன்: (அலட்சியமாய்) யாரது? நாடோடி நாரதரா?

நாரதர்: சீமாலிகா! நலமா!

சீமாலிகன்: நலத்திற்கு என்ன குறை? கண்ணனை நண்பனாகப் பெற்ற பின், கவலையும் உண்டோ?

நாரதர்: சீமாலிகா! கண்ணன் ஒரு கபடக்காரன் அவனை முற்றிலும் நம்பிவிடாதே!

சீமாலிகன்: நாரதரே! நாவை அடக்கிப் பேசுங்கள். சீமாலிகன் எதிரில், கண்ணனைப் பழித்துப் பேசலாகாது.

நாரதர்: உண்மை கசக்கத்தான் செய்யும் நீயாகவே தெரிந்து கொள்வாய்! (சற்றுப் பொறுத்து) சரி, சீமாலிகா! கண்ணன் உனக்கு எல்லா வித்தைகளும் கற்றுத் தந்து விட்டானா?

சீமாலிகன்: நூற்றுக்கு நூறு கற்றுக்கொண்டு விட்டேன்.

நாாதர்: சீமாலிகா! நீ ஏமாந்து போனாய்? முற்றும் கற்றுத் தந்துவிட்டதாக உன்னை நம்ப வைத்துள்ளான். இது ஒன்றே போதாதா அவன் கபட நாடகக்காரன் என்பதற்கு?

சீமாலிகன்: நாரதரே! நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே! என் மனம் அறியக் கண்ணன் ஒன்றும் மறைக்கவில்லை. மறைக்கவும் மாட்டான்.