பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

அனுமக் கொடி அசைந்தது. ஆனை பிறந்தது
உரை கிடந்த வாட்கள் ஒளி வீச்சில் மின்னின
நாண்கன் அதிர்ந்தன, நாரணன் நகைத்தான்
போருக்கும் புகழுக்கும் சரங்கள் மழை பொழிந்தன
ஈட்டிக்கு மார்காட்டி வாளுக்குத் தோள் கொடுத்து
போர் மகளை பொங்கும் ரத்தத்தால் முழுக்காட்டி
பார் மகளின் வயிற்றுக்கு தன்னுடலை இரைகொடுத்து
புகழ் மகளின் எட்டுக்குத் தங்கள் பெயர் கொடுத்து
வருகின்ற வீர மறவர்க்கு இடம் கொடுக்க
சொர்க்கத்தின் திருக்கதவம் திறக்கப்பட்டது
தரும க்ஷேத்திரம் குரு க்ஷேத்திரமாகத் தழல்பட்டது

காண்டீபன்

நாரணனே நான் வணங்கும் ஞானகாரணனே
ஐயம் தெளிந்தது அச்சம் தீர்ந்தது
பாசம் விலகிற்று மனபாரம் தீர்ந்தது.
மோகம் தீர்ந்தது யோகம் வளர்ந்தது
வீரம் வீரம் என்றே நாடி அதிர்கிறது.
வெற்றி வெற்றி என்றே மூச்சு அயிர்க்கின்றது
சாரதியே என் ரதத்தை விரைந்து நடத்து.

இந்தப் பாரின் அதத்தை நான் நடத்துகின்றேன்


அவன் வில்லிலே பிறந்த நாதம் வீரம் பாடிற்று
சங்கிலே எழுந்தது மத்திர முழக்கம்