பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

கம்பனே தொடுகறி உண்டோ எனக் கேட்டாள்.
திடுக்கிட்டான் விழிப்புற்றான். யாரடி கிழமே
பூசைக்குரிய பொங்கலை எச்சில் படுத்தினை
என்று அவள் கையிலிருந்த கலயத்தைப் பறித்தான்.
நான் கிழம் பழுத்து உதிரும் பருவம்
நீபழுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க வந்தேன்.
கிழவிக்கு வயிறு பெரிதோ வாயும் பெரிதோ
எங்கிருந்து வந்தனை எங்கு போகின்றனை?
கேளடா கருவூரிலிருந்து வந்தமகனே
காட்டூருக்குப் போகின்றேன், இடையில்
பாட்டூரில் உன்னையும் பார்த்தேன் என்றாள்
மெய்மறந்து அவள் ஒளி முகத்தைப் பார்த்திருந்தான்.
பின்னர் அன்னையே பொங்கலில்லை. மன்னிக்க
என்றபடி மாலையுடன் கருவறைக்குச் சென்றான்
அதிர்ச்சியினும் அதிர்ச்சி அவனை உலுக்கிற்று
காளியின் கரத்திலே பொங்கலைக் கண்டான்
உதட்டிலே தின்ற சுவடு தெரிந்தது.
தன்னை மறந்தான் அவள் தாளில் விழுந்தான்
தாரை தாரையாக கண்ணீர் பெருகிற்று.
தாயே தாயே என்று வாயும் புலம்பிற்று
அபயக்கரம் நீண்டு அவனை வருடிற்று
மாகாளித் தாயே மகாமாயை நீயே

மாரி என்றால் மழை என்பார்