பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கம்பனும் காளியும் கோபுரத்திலிருந்து இறங்கினர்
கம்பர் இனிஒரு பூசாரி அல்ல
பூசைக்குரியவர் என்று போற்றினர்
வள்ளலும் கம்பரை வாரி அணைத்தார்
மன்னவன் மார்பில் புரண்ட மணியாரம்
கம்பர் பெருமகன் கழுத்தை அலங்கரித்தது.

சோழன்

நான் இந்த புவிக்கு வேந்தன் ஆயினும்
என்ஆணை இயற்கையின் மேல் செல்லுவதில்லை.
இங்கே தமிழுக்கு இயற்கையும் பணியக் கண்டேன்
கம்பர் பெருமகனே கவிஞர் குலதிலகமே
நீங்கள் பிறந்தது இந்த மண்ணுக்குப் பெருமை
தமிழுக்குச் சிறப்பு சரித்திரத்துக்குப் புகழ்
என் பேரவைக்குப் புலவராக அழைக்கிறேன்.

கம்பர்

மன்னர் மன்னனே என்னை மன்னிக்க
அன்னையின் தாண்டுக்கே என்னை ஆளாக்கினேன்
மற்றபடி பெருமை எதுவும் வேண்டிலேன்.”

சோழன்

“தாமரைதண்ணீருக்குமேல் மலர்ந்திருப்பதே அழகு

உள்ளே கிழங்காக இருப்பதில் உயர்வென்ன