பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

சோழன்
கோசலைச் செல்வனை மிதிலைச் செல்வியை
தமிழில் தந்தால் என் தாகம் தணியும்
என வேந்தனும் ஆர்வம் ததும்பக் கேட்டான்

கம்பர்
அது வடமொழி, பெருங்கடல் எனக்குப் பயிற்சியில்லை
கோயிற் குறிப்பாட்டு பரம்பரை வழிவந்தது
உடுக்கடித்து கதை சொல்வது எங்களுக்கு வழக்கம்
ஆதலின் ராமகதை நானும் பாடுவதோ
என மறுத்தற்கு மறுத்தார் சடையப்பர்

வள்ளல்
அனைத்து புலமையும் அவளுக்கு அரிச்சுவடி
நீர் எழுத்தாணி பிடித்தால் எழுத்தாக வருவாள்
நானும் ஏடு திருத்துவேன் எழுத்தாணி தீட்டுவேன்
மன்னவனே மனமுவந்துச் சொல்லுகிறேன்.
கம்பர் எழுதும் பொறுப்பை நான் ஏற்கிறேன்
அதற்கு மேல் மறுப்பில்லை அவள் சித்தம் என்றார்
காற்று அசைத்ததோ காளியின் கருணையோ
கலகலவென்று மணி ஓசை கேட்டது
கம்பரின் மனைவிக்கு பெருமை பிடிபடவில்லை.
கொண்டவனை குறைத்து மதித்தற்கு கொதித்தற்கு

கா.க—2