பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கூத்தர்
“துடுக்கு உன் நடத்தையில் இல்லை கம்பா”
அணுக்குற்றச் சோழன் “என் நடத்தையிலோ?” என்றான்

கூத்தர்
இல்லை வேந்தே, மத்துருட்டிப ஆயமகள்
இடையர் வீட்டுக் கிழவியல்ல
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
எனக்கருளும் தெய்வம் நான் வணங்கும் கலைமகள்
கம்பனுக்கு பணிமகள் ஆனாள் பரிதாபம்
இதற்குப் பின்னும் இருப்பதோ நானென்றான்
ஆயன் குடிலும் ஆயாளும் காணவில்லை
வேந்தன் கம்பனுக்கு வந்தனை செய்தான்
முழுக் காவியம் என்று கேட்கலாம் எனக் கேட்டான்.
விரைவில் அரங்கேற்றுவோம் என்றார் சடையர்
மன்னவன் சூழலுடன் மாளிகை திரும்பினான்
வெண்ணை நல்லூர் வள்ளலுக்கு மிரட்சி
கம்பர் அவர் கலவரத்தை கண்டு சிரித்தார்

கம்பர்
எந்தையே ஏர் எழுபதின் பாட்டுடைத் தந்தையே
இன்னும் முதற் பாட்டுத் துவங்கவில்லை.
இடையில் ஒரு பாட்டு அதிலும் புதுப்பதம்
காத்தவள் அன்னை இருக்கின்றாள் கவலை ஏன்